Dengu


சிறு வெங்காயம் :

  •  சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக் குணப்படுத்தத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  •  குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட்டு வருவது நல்லது.

நொச்சி, வேம்பு :

  • நொச்சி, வேம்பு போன்றவற்றின் இலைகளைக் கொண்டு புகைமூட்டம் போடுவதன்மூலம் கொசுக்களை விரட்டலாம்.

மலைவேம்பு இலை :

  •  மலைவேம்பு இலைகளுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சுமார் 10மி.லி அளவு தினமும் மூன்று தடவை குடித்து வந்தால் டெங்கு வைரஸை எதிர்க்கும் சக்தி படைத்தது.

கொதுமைப்புல் :

  •  கொதுமைப்புல் அல்லது பார்லி புல்லை மையாக அரைத்து வடிகட்டி குடித்து வருவதன்மூலம் காய்ச்சல் குணமாகும்.

நிலவேம்பு :

  •  நிலவேம்புக் கஷாயம் டெங்கு காய்ச்சலைக் குணப்படுதுவதுடன் ரத்த தட்டணுக்கள் மற்றும் நோய் எதிப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • நிலவேம்பு,வெட்டி வேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய்புடல், பற்பாடகம், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு சேர்ந்ததே நிலவேம்புப் பொடியாகும். 5 முதல் 10 கிராம் நிலவேம்புப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக வற்றியும் வடிகட்டி குடிக்க வேண்டும்.

கறிவேப்பிலை :

  • கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, மிளகு 10, ஒரு டீஸ்பூன் சீரகம், இஞ்சி சிறு துண்டு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்க வேண்டும்.
  •  அதில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்துக் கலந்து வடிகட்டி தேன் சேர்த்துக் காலை,மாலை, இரவு என குடித்து வந்தால் எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.

ஆரஞ்சுப் பழம் :

  •  ஆரஞ்சுப் பழம் செரிமானத்துக்கும் சிறுநீர் போவதற்கும் உதவுவதால் டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் விடுபட முடியும்

ஆடாதொடை :

  • ஆடாதொடை மணப்பாகு டெங்கு காய்ச்சலுக்கு நல்ல மருந்து. 5 வயதுக்க்ட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து மி.லி வரை எடுத்து 10 மி.லி நிலவேம்புக் குடிநீருடன் கலந்து குடிக்கக் கொடுத்து வரலாம்.

அறுகம்புல் வேர் :

  • அறுகம்புல் வேர் ஒரு கைப்பிடிஎடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துக் காலை மாலை 50 முதல் 100 மி.லி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்