இயற்கை உரமாக தக்கை பூண்டு சாகுபடி வளர்ப்பு
- தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது. செடிகளை ஆறடி உயரம் வரை வளர்த்து அதை அந்த இடத்திலேயே மடக்கி உழுது உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இதுகுறித்து: ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ, தக்கை பூண்டு விதையை விதைத்து, 45 முதல் 70 நாள்கள் அல்லது 50 முதல், 60 நாட்களுக்கு பின்னர், 6 அடி வரை நன்றாக வளர்ந்த தக்கை பூண்டு செடிகளை பூப்பூத்தவுடன் அதை அந்த இடத்திலேயே மடக்கி உழுது அதையே உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அது மண்ணோடு மக்கி பசுந்தாள் உரமாக மாறிவிடும். இவ்வாறு செய்வதால் அடுத்து போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. செலவும் அதிகம் இருக்காது. மண்ணின் வளம் கெடாமல் பாதுகாக்கப்படும்.
- இந்த தக்கைப்பூண்டு செடிகள் உரமாக மாறி மண்ணின் தன்மையை அதிகரிக்கும். முக்கியமாக அடுத்து போடப்படும் பயிருக்கு தழைச்சத்து கிடைத்து விடுவதுடன் பூச்சி தாக்குதலே இருக்காது என்பதும் குறிப்பிடத் தக்கது.
- ஒரு மூட்டை ரசாயன உரம் ரூ.1500 வரை வாங்க வேண்டிய இந்தக்காலத்தில் இது போன்ற தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன் நல்ல மகசூலையும் பெறலாம்.
நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்